உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்.. தப்பு செய்தவதன் தண்டனையை அனுபவிப்பான்.. அமைச்சர் அதிரடி சரவெடி.!

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 7:41 AM IST
Highlights

திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. உப்பு தின்னவன் தண்ணி குடி தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் சோதனையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று  திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.2.65 கோடி ரொக்கமும், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்;-  பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. பெரும்பாலான பேருந்துகள் கூட்டமின்றி சென்றதாகவும் அவர் விளக்கமளித்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. உப்பு தின்னவன் தண்ணி குடி தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான். யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிப்பது இயல்பு என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

click me!