AIADMK: கண் சிவந்த ஓபிஎஸ், இபிஎஸ்..அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட முக்கிய நிர்வாகி..!

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 7:03 AM IST
Highlights

 எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணம் ஆன பெண் ஒருவருக்கு வினோத் அடிக்கடி பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் வினோத். இவர் பூலாம்பாடி அதிமுக நகர செயலாளராக உள்ளார். இதனிடையே, பூலாம்பாடியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணம் ஆன பெண் ஒருவருக்கு வினோத் அடிக்கடி பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை வழிமறித்த வினோத் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தன் ஆசைக்கு இணங்க மறுத்தால் எரிவாயு நிலையத்தில் வைத்து உயிரோடு கொழுத்திவிடுவேன் என்றும் அந்த பெண்ணை வினோத் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வினோத்திடமிருந்து அப்பெண்ணை மீட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் அரும்பாவூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் வினோத் மீது புகார் கொடுத்தார்.
இந்த புகாரை தொடர்ந்து வினோத்தை போலீசார் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த A.வினோத் (பூலாம்பாடி பேரூராட்சிக் கழக செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

click me!