
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற ரீதியில் தள்ளு தள்ளு என நாட்களை கடத்தி கொண்டிருக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.
முதலமைச்சராக பதவி ஏற்ற பின் பழனிசாமிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர் பன்னீர்செல்வம்.
ஆனால் தற்போது நண்பேண்டா ரேஞ்சில் ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் இணைந்த கரங்களாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கே அவ்வளவாக போகாத ஜெ சொந்த செல்வாக்கின் மூலமாக 136 சீட்டுக்களை சுலையாக பெற்றிருந்தார்.
தற்ப்போது நடைபெற்று வரும் பங்காளி சண்டையில் தினகரனுக்கு உறுதியான ஆதரவு 19 பேர் என்ற நிலையில் அருதிபெரும்பான்மைக்கு தேவையான 117 என்ற எண்ணை அடைய கூட எடப்பாடிக்கு இன்னும் ஒரு எம்.எல்.ஏ தேவை.
தற்போது ஒபிஎஸ்ஸை விட இபிஎஸ் மீது கடும் கோபத்தில் உள்ள டிடிவி தினகரன் எடப்பாடி ஆளவே கூடாது உறுதியாக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாபஸ் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்திருப்பதால் எந்த நேரமும் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவரப்படி, டிடிவி வாபஸ் பெற்றுள்ள நிலையில், கட்சிகளின் நிலை குறித்த நிலவரத்தை காணலாம்.
அதிமுக 135 (திருவாடானை கருணாஸ், நாகை தமிமுன், காங்கேயம் தனியரசு சேர்த்து )
எடப்பாடி 116
டிடிவி 19
திமுக 89 (கடையநல்லூர் அபுபக்கர் சேர்த்து )
காங்கிரஸ் 8 (4 பேர் கன்னியாக்குமரி , 1 ஊட்டி, தாராபுரம் 1, மடத்துக்குளம் 1, சிவகங்கை 1. )
சபாநாயகர் 1
காலியிடம் 1
ஆட்சி தப்பிக்க 117 கட்டாயம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் 118
டிடிவி கழித்தால் 135 - 19 = 116
இந்நிலையில், டிடிவி தினகரன் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் அவர் ஆட்சியை களைப்பாரா அல்லது போக்கு காட்டுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.