மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதும் பெறப்பட்டு விட்டது.. தூள்கிளப்பும் அமைச்சர் ஜெயக்குமார்

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2021, 11:26 AM IST
Highlights

ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை பல திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார். தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுமையும் பெறப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் 3வது நாளாக வண்ணாரப்பேட்டை துலுக்காணத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் எம்.சி ரோடு, ராபின்சன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பிரச்சரத்தை மேற்கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு கடன் பெற்றாலும் குறிப்பிட்ட சதவீதத்தை உட்பட்டுதான் கடன் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சராக இருக்கும் பொழுது தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மேலும், திமுக அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பொறுத்துக் கொள்ளாமல் விரக்தியில் பேசி வருவதாகவும் தமிழகத்தின் நிதி நிலையை மனதில் வைத்தே தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டு உள்ளதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை பல திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார். தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  தற்போது வரை நிலுவைத்தொகை வர வேண்டியது இல்லை என்றும் கூறினார். 

 

click me!