
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பு வெளியாவதற்கு முன் ஊடகங்களுக்கு செய்தி கிடைத்தது எப்படி என்றும் டிடிவி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தல் டிடிவி தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ். குரல் கொடுத்தார். அப்போது சசிகலா அணியில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இவ்விரு அணிகளும் போட்டியிட்டன. இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால் இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் இணைந்து சசிகலா தினகரனை ஓரம் கட்டினர். இந்த நிலையில்
ஒருங்கிணைந்த ஓ.பி.எஸ்-இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என 2 அணிகளாக தற்போது செயல்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை
தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இவ்விரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
இவ்விரு அணிகளும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தேர்தல் ஆணையத்தில் முன் வைக்கப்பட்டன. இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி முதலமைச்ச்ர எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார் கூறினர்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பு வெளியாவதற்கு முன் ஊடகங்களுக்கு செய்தி கிடைத்தது எப்படி என்றும் டிடிவி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தல் டிடிவி தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.