நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று மீண்டும் திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தீவிரமடையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு ஒரு தொகுதியும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கவதில் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் கொடுத்த 10 தொகுதியை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதி என 3 தொகுதியை கேட்டுள்ளது.
undefined
திமுக- விசிக மோதல்
ஆனால் திமுக தரப்போ இரண்டு தொகுதி மட்டுமே தரப்படும் என உறுதியாக தெரிவித்து விட்டது. இதன் காரணமாக திமுக- விடுதலை சிறுத்தைகள் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்தது. மேலும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் செல்லவில்லை. இதன் காரணமாக விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி செல்லும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இல்லையென்றும் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு ஏற்படுமா.?
எனவே இன்று மாலை நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு விடுதலை சிறுத்தை கட்சிக்கு 3 தொகுதியை ஒதுக்க முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிக்கு ஒத்துக்கொள்ளுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோ போட்டு போஸ்டர்.. கிண்டல் செய்த அதிமுக.!! பாஜக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்