எங்களை ஊடகங்கள் மூலம் கோமாளிகளாக சித்தரிக்க திமுக போடும் திட்டம் பலிக்காது ..!! கருணாநிதி போல் தோற்றுப்போவார்கள்..!! அமைச்சர் உதயக்குமார் சாடல்..

By Thiraviaraj RMFirst Published Feb 8, 2020, 7:39 AM IST
Highlights

ஒருமுறை எம்ஜிஆர்  முதல்வராக இருந்தபோது, திமுக தலைவர்  கருணாநிதி, இப்பதவி நாங்கள் சாப்பிட்ட தூக்கி எறிந்த  இலையை  நீங்கள் இப்போது கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.  இதற்கு பதிலளித்த எம்ஜிஆர் , நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் மக்கள் பணத்தை எவ்வளவு சாப்பிட்டு உள்ளீர்கள் என, கணக்கு பார்த்துள்ளோம் என்று பதில் சொன்னார்.  அது போன்ற எதிர்க்கட்சியினர்,  ஊடகங்கள் எங்களை கோமாளியாக காட்டுவதற்கு முயற் சிக்கின்றனர்

எதிர்க்கட்சியினர்,  ஊடகங்கள் மூலமாக எங்களை கோமாளியாக காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.அது பலிக்காது; அதற்காக நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிமாட்டோம்; எதையும் தைரியமாக எதிர் கொள்வோம் என்று அமைச்சர் உதயக்குமார் பேசியிருக்கிறார்.


 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, தே. கல்லுப்பட்டி,பேரையூர், சுப்புலாபுரம், குன்னத்தூர்,வில்லூர்,கள்ளிக்குடி,செங்கப்படை, கூடக்கோவில்   பகுதிகளில் அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் 1,475 மாணவர்களுக்கு   இலவச மிதிவண்டிகளை வழங்கினார் . 
விழாவில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது;

மாணவப் பருவம் என்பது முக்கியம் வாய்ந்தது. கவனத் துடன்  உழைத்தால் கல்வியில் முதன்மை பெறலாம். போர்க்களத்தில் கையில் ஆயுதமின்றி,  எதிரிகளிடம் வெற்றியை பெற முடியாது. அதுபோல் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு சீருடைகள், புத்தகம், நோட்புக், உணவு, மடிக்கணினி , சைக்கிள்  அவசியம் என, சிந்தித்து அதை வழங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா . இந்தியாவில் உயர் கல்வி சேர்க்கையில்  தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 


அவரது வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடியும்,   மாணவ சமுதாயத்திற்கு தொடர்ந்து பல திட்டங்களை செய்கிறார். பயன்படுத்திக் கொள்ளுங்கள், என்றார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்," 

 எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும்  இடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.  நிதியுதவி அளிக்கும் ஜப்பான் குழு 10 முறை தொடர்ந்து ஆய்வு செய்துள்ளது.இதில் திருப்தித் இருப்பதாக அறிக்கை கொடுத்திருக்கிறது.  யாரும் அச்சம்  எழுப்பி,  மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.  ஒட்டுமொத்த தமிழக மக்களும் எய்ம்ஸ் மருத்துவமனை வர பாடு பட்டுக் கொண்டுள்ளனர்.  ஒவ்வொருவரும் ஆடிட்டரை போன்று கேள்வி கேட்கின்றனர். நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். சிறிது காலம் அவகாசம் தேவைப்படும். அமைச்சர்கள் பற்றி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்ப முயன்றாலும், தோற்று போவார்கள்.   


ஒருமுறை எம்ஜிஆர்  முதல்வராக இருந்தபோது, திமுக தலைவர்  கருணாநிதி, இப்பதவி நாங்கள் சாப்பிட்ட தூக்கி எறிந்த  இலையை  நீங்கள் இப்போது கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.  இதற்கு பதிலளித்த எம்ஜிஆர் , நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் மக்கள் பணத்தை எவ்வளவு சாப்பிட்டு உள்ளீர்கள் என, கணக்கு பார்த்துள்ளோம் என்று பதில் சொன்னார்.  அது போன்ற எதிர்க்கட்சியினர்,  ஊடகங்கள் எங்களை கோமாளியாக காட்டுவதற்கு முயற் சிக்கின்றனர். அதற்காக பொது வாழ்க்கையில் இருந்து விலகிமாட்டோம். தைரியமாக எதிர் கொள்வோம்.விமர்சனங்கள் வராமல் முயற்சிப் போம்.  மக்களுக்காக  யார்  உழைக்கின்றனர்  என்று மக்களுக்கே தெரியும், என்றார்.

TBalamurukan

click me!