தமிழகத்தில் ஒன்றுமே இல்லாத பாஜகவை உருவாக்கியதே தி.மு.க தான். திமுகவே பாஜகவின் A டீம்.. தெறிக்கவிட்ட சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2021, 4:44 PM IST
Highlights

நாடு சுதந்திரம் பெற்ற போது தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்து இருக்க வேண்டும். பாஜக - காங்கிரஸ் இரண்டுமே எனக்கு எதிரி தான் . என் நிலத்திற்கு இந்திய கட்சிகள் தேவை இல்லை, மாநிலத்தை ஆள மாநில கட்சி போதும் என்றார்.

தமிழகத்தில் ஒன்றுமே இல்லாத பாஜகவை உருவாக்கியது தி.மு.க தான்,  முக.ஸ்டாலின் ஒரு தடவையாது பாஜகவுடன் கூட்டணி இல்லை என செல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், மறைந்த பழனிபாபா மற்றும் முத்துக்குமார் அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் மண்ணடி பகுதியில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நினைவேந்தல் பொதுதுகூட்டத்தில் பங்கேற்று முத்துக்குமார் மற்றும் பழனிபாபா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: பழனிபாபா வாழ்க்கையே எனக்கான வழித்தடம், ஒரு மத வட்டத்திற்குள் பழனிபாபாவை அடக்கிவிட முடியாது என கூறினார். இந்த மண்ணில் என் கட்சியை நிராகரிக்கலாம், என் அரசியலை யாரும் நிராகரிக்க முடியாது என்றார். முருகனுக்கு சிக்ஸ் பேக் போட்டு கூட ஒவியம் வரைவேன், எனக்கு தெரியும் முருகன் எப்படி இருப்பார் என்று என கூறினார். காயிதே மில்லத் மற்றும் பழனிபாபா குறித்து நான் பேசுகிறேன் மு.க ஸ்டாலின் அவர்களால் 3 நிமிடம் எழுதி கூட பேச முடியுமா என கேள்வி எழுப்பினார்,  மேலும் சிறுபான்மை என்பது சலுகை அல்ல உரிமை, ஆகப்பெரும் சிறுபான்மையே எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி தான் என்றார். 

என்னை போலவே எல்லாரையும் நம்பி ஏமாந்தவர் பழனிபாபா, அவர் நினைத்த அரசியலை நான் செய்வேன் என்றார். இந்த தேசம் யார் உடையது? அதை பற்றி முதலில் விவதிப்போம் என்றார். முதலில் உளவியல் விடுதலை அடைய வேண்டும், நாம் சிறுபான்மை இல்லை, பெரும்பான்மை மக்கள் என்பதை உணர வேண்டும். மதம் மாறி கொள்ளும், மொழி இனம் மாறாது என்றார். சிறுபான்மை என்பது சலுகை அல்ல அது நமது உரிமை என்றார்.நாடு சுதந்திரம் பெற்ற போது தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்து இருக்க வேண்டும். பாஜக - காங்கிரஸ் இரண்டுமே எனக்கு எதிரி தான் . என் நிலத்திற்கு இந்திய கட்சிகள் தேவை இல்லை, மாநிலத்தை ஆள மாநில கட்சி போதும் என்றார். 

எந்த காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா ? முக.ஸ்டாலின் ஒரு தடவையாது பாஜகவுடன் கூட்டணி இல்லை என செல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என கூறினார். ஈழத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்க உதவிய தேசம் இந்திய தேசம் மறக்க முடியுமா, அதன் இந்த வெறி உள்ளது. இந்த தேர்தலில் விழ்த்துகிறோம், காங்கிரஸ் எனது இனத்தின் எதிரி. பாஜக மானுடத்தின் எதிரி என்ற அவர், தமிழகத்தில் இருக்கும் ஒரே மாநில கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்றார். நாம் தமிழர் எந்த காலத்திலும் பாஜக காங்கிரஸ், அதிமுக, திமுக வுடன் கூட்டணி கிடையாது என கூறினார். திமுகவால் காசு கொடுக்கமால் ஒரு கூட்டத்தை கூட்ட முடியுமா ? கிராம சபை கூட்டத்தை கூட காசு கொடுத்து தான் கூட்டினார் ஸ்டாலின். 

ஒன்றுமே இல்லாத பாஜகவை கூட்டமாக உருவாக்கியது திமுகதான் என்ற அவர், என்னை பாஜகவின் B டிம் என சொல்கிறீர்கள் ஆனால் திமுக தான் மெயின் டிம் என கூறினார். பாஜக - காங்கிரஸ்- திமுக மூன்று கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற அவர், நீங்கள் என்னை நம்பினாலும், நம்பவில்லை என்றாலும், என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை. 

பெரிய பிக்-பாஸ் நான் தான் யார் என்ன செய்தார்கள் என்று எடுத்து காட்டி விடுவேன். தி.மு.க இஸ்லாமிய கிறுத்துவன் நாதியற்றவன் என்ற கருத்து கொண்டுள்ளது. ஸ்டாலினை என்னை போல் ஒரு முறை பிஜேபி எதிர்த்து பேச சொல்லுங்கள் பார்ப்போம், நீட் தேர்வு கொண்டுவந்தது காங்கிரஸ், தி.மு.கதான் வேளாண் சட்டங்களை அப்போதே அதரித்தது. இறுதியாக, இந்த பகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

 

click me!