
திருவண்ணாமலை சேவூரில் ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசிய எழிலரசி என்ற பெண், சிலிண்டர் விபத்தில் தனது தாய் மரணமடைந்ததாகவும் அதற்காக தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், நிவாரண தொகை செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தி.மு.கவின் பொய் புகார் பிரச்சாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய எழிலரசி என்ற பெண், ஆரணி புதுக்காமூர் பகுதியில் தனது வீட்டின் அருகே நடைபெற்ற சிலிண்டர் விபத்தில் தனது தாய் சந்திரா இறந்துவிட்டதாகவும் இதற்காக தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த சந்திராவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு அந்த தொகை இறந்த சந்திராவின் மகன் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தனது வங்கி கணக்கிலிருந்து மின்னனு பரிவர்த்தனை மூலம் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கிற்கு அனுப்ப பிறப்பித்த உத்தரவு சான்றாக உள்ளது. (உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது).
எழிலரசியின் சகோதரரான முத்துக்குமரனின் வங்கி கணக்கிற்கு நிவாரண தொகையை செலுத்த முழு சம்மதம் தெரிவித்து எழிலரசி கையொப்பமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இறந்த சந்திராவின் மகள்கள் எழிலரசி உள்ளிட்ட மூவரும் மகன் முத்துகுமரனும் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் எழிலரசி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளார். வாக்குமூலம் படிவமே இதற்கு சான்றாக உள்ளது. (வாக்குமூலத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).
முதலமைச்சரின் நிவாரண தொகையை பெற்ற பின்பும் தொகை கிடைக்கவில்லை என்று அபாண்டமாக எழிலரசி பொய் சொன்னாரா? அல்லது தி.மு.கவினர் திட்டமிட்டு எழிலரசியிடம் இவ்வாறு தெரிவிக்குமாறு வற்புறுத்தினார்களா? எதுவாக இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தி.மு.கவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் தி.மு.கவினர் அப்பாவி பொது மக்களை வைத்து நாடகமாடி வருகின்றனர் என்பதற்கு இந்த சம்பவே சாட்சியாக உள்ளது.