இபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை ரத்து செய்யுங்கள்.! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ்

By Ajmal Khan  |  First Published May 4, 2023, 12:43 PM IST

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


இபிஎஸ்க்கு எதிராக வழக்கு

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலிலும் போட்டியின்றி இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தநிலையில் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து கடிதம் அனுப்பியது. இதனால் உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு  கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  இந்தநிலையில் அ.தி.மு.க. உறுப்பினராக ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி  ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.  அந்த மனுவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது,  

Tap to resize

Latest Videos

காங்கிரஸ்க்கு கொடுத்த ஆதரவை திமுக வாபஸ் பெறனும்.! கூட்டணிக்கு வேட்டு வைக்கும் சீமான்- ஏன் தெரியுமா.?

தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள், மாற்றங்கள் தொடர்பான தீர்மானங்களையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தவறு என தெரிவித்துள்ளார்.  அதேபோல பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததும் தவறானது,  எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருஷேந்திரகுமார் கவுரவ் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதி, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி கோரிக்கை தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகை நிதி செலவில் முறைகேடா.?அப்பட்டமான பொய்; திராவிட மாடல் காலாவதியானது: இறங்கி அடிக்கும் ஆர்.என்.ரவி

click me!