அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாள்... தமிழக மக்களை வாழ்த்திய எடப்பாடியார்.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2020, 1:45 PM IST
Highlights

அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை அழித்த தினமே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், 

அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:   தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை அழித்த தினமே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும் இனிமையும் நிறைந்த நன்னாள் ஆகவும் விளங்குகிறது. 

தீபாவளித் திருநாளில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகிய, நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!