ஒருத்தனையும் சும்மா விடாதீங்க.. இது மனித நேயமற்றது.. காட்டுமிராண்டித் தனமானது.. கொதிக்கும் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Nov 17, 2022, 6:33 AM IST
Highlights

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை  அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை  அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிகழ்வு வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க:- இந்த சிக்கல்களுக்கு காரணம் ஆளுநர் தான்.. அவருக்கு கடிவாளம் போட ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

சிறுமியை கடத்திய மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை படம் பிடித்தும் மிரட்டியுள்ளார். சிறுமி காவல்துறையினரால் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் மிரட்டல் தொடர்ந்தது தான் சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித நேயமற்றவை; காட்டுமிராண்டித் தனமானவை. படித்து, வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்!(3/4)

— Dr S RAMADOSS (@drramadoss)

 

 

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித நேயமற்றவை; காட்டுமிராண்டித் தனமானவை. படித்து, வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

இதையும் படிங்க:-  கச்சா எண்ணெய் விலை குறையும் போது.. எரிபொருட்களின் விலையை குறைப்பது தானே நியாயம்.. கடுப்பாகும் ராமதாஸ்.!

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்; சிறுமியின் குடும்பத்திற்கு  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:-  படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் உயிரிழப்புக்கு நீங்க தான் காரணம்.. தமிழக அரசை அலறவிடும் ராமதாஸ்.!

click me!