புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் தகவல்.

Published : Oct 04, 2021, 12:40 PM IST
புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் தகவல்.

சுருக்கம்

நீலகிரியில் உலாவரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொள்ள பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீலகிரியில் உலாவரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொள்ள பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இவ்வாறு கூறியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள எஸ்டேட் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக்கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி அடித்துக் கொன்றது. 

உடனே புலியை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் வனத்துறையினர் புலியைத் தேடி வந்த நிலையில், அந்தப் புலி மசன குடிக்கச் சென்றது. பின்னர் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கல பசுவன்(65)  என்பவரையும் புலி அடித்து கொன்றது, இதுவரை இந்த புள்ளி நாலு பேரை கொன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புலியை வேட்டையாடி கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர், பின்னர் புலி தாக்கி உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜ், புலியை பிடிப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தெரிவித்த அவர் புலி எக்காரணத்தைக் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என்றும், புலியை முடிந்தவரை மயக்க மருந்து கொடுத்த பிடிக்க முயற்சிக்கப்படும் என்றும், அது முடியாத பட்சத்தில் சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை எதிர்த்து உத்திரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்ற பெண், ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார், அதில், அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றப்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், இன்று தலைமை நீதிபதி சஞ்சய் பாரதி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது, அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!