நிர்மலா தேவி விவகாரத்தில் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி! அமைச்சர் ஜெயக்குமார்!

First Published Apr 17, 2018, 11:49 AM IST
Highlights
The convicts will be convicted - Minister Jayakumar


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் குற்றவாளிகளுக்கு இந்திய சட்டத்தின்படி தண்டனை கொடுக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோடடையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் உயர் அதிகாரிகளிடம்
அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நிர்மலாதேவியின் வற்புறுத்தினாலும், அந்த மாணவிகள் அதனை மறுத்தனர். பேராசிரியை மாணவிகள் பேச்சு
அடங்கிய ஆடியோ, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

அந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம், பேசும் நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனர் என்றும்
அவர்களது விருப்பத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால், அவர்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வார்கள் என்றார். மேலும், மாதம் தோறும்
உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும், 85 சதவீத மதிப்பெண்களும் உஙகளுக்கு வழங்கப்படுடம் என்று கூறினார். இந்த விவகாரம் மிகவும்
ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நிர்மலா தேவு பேசியிருந்தார்.

நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கல்லூரி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும்,
மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து,
பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில், நிர்மலா தேவியின் போலீசார் சென்றனர். அப்போது நிர்மலா தேவி உட்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டினுள் இருந்துள்ளார். 5 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருந்த நிர்மலா தேவியை, போலீசார் வீட்டின் பூட்டை  உடைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி வேண்டும் என்று கோரிக்கையை எழுந்துள்ளது. 

இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்திய சட்டத்தன்படி தண்டனை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றார். நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் போலீசாரும், விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் சிபிசிஐடி விசாரணைக்கு தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமர் கூறினார்.

கர்நாடக தூதுவர் ரஜினி என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து கூறியது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் நிறைய நாரதர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

click me!