’திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தண்டனை நிச்சயம்...’ அதிமுகவை கலங்கடிக்கும் கனிமொழி..!

Published : May 22, 2019, 01:27 PM IST
’திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தண்டனை நிச்சயம்...’ அதிமுகவை கலங்கடிக்கும் கனிமொழி..!

சுருக்கம்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.   

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உறுதியளித்துள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 23 பேர் பாலியானார்கள். இன்றோடு ஒராண்டுகளாகி விட்டது. இந்தச் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்துள்ள தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி, ’’சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நம் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஓராண்டு நிறைவுநாள் இன்று. நம் மண்ணுக்காகாவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்தவர்களுக்கு என் அஞ்சலி!

கழகத் தலைவர் தளபதி அவர்கள் உறுதியளித்தது போல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

நேற்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பாஜக, அதிமுக அரசி குற்றம்சாட்டி இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விவகாரத்தை விசாரிக்கப்போவதாகவும், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தரப்போவதாகும் கூறியிருந்தார். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!