முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல... பாஜகவை தொடர்ந்து பாமகவால் புதிய தலைவலி..!

By vinoth kumarFirst Published Dec 31, 2020, 11:55 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி ஒரு வழியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். 

ஆனால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட அக்கட்சியின் மற்ற தலைவர்களும் அதிமுக வேண்டுமென்றால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கலாம். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய  ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை டெல்லி பாஜக மேலிடம் தான் அறிவிக்கும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனாலும், அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தது தேர்தல் பிரச்சாரத்திலும் அக்கட்சி ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், எடப்பாடி பழனிசாமிமை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக தலைவரின் அதிரடியான கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறியுள்ளார். அதிமுகவின் நிலைபாட்டிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது அதிமுகவின் நிலைப்பாடு ஆகும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!