முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை.! வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்

By Ajmal KhanFirst Published Feb 8, 2023, 2:24 PM IST
Highlights

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முக சிதைவால் சிறுமி பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்கியம். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் டான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். நல்ல நிலையில் இருந்த சிறுமிக்கு நாளுக்கு நாள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்கள் போக போக டான்யாவின் முகம் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது.  பள்ளியில் சக மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சிறுமியை ஒதுக்கும் நிலை உருவானது.

ஈரோடு இடைத்தேர்தல்..! ஈவிகேஎஸ்காக களத்தில் இறங்கும் ஸ்டாலின், உதயநிதி- பிரச்சாரத்திற்கு தேதி குறித்த திமுக

சிறுமிக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான தகவல் வெளியானது.இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழக்க உத்தரவிட்டார். தனியார் மருத்துவ கல்லூரியில் சிறுமிக்கு தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், சாப்பிடுவதற்கு வாய் திறக்கவும் சிறுமி  சிரமப்பட்டு வந்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2-வது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சிறுமி மற்றும் டானியாவின் பெற்றோருக்கு தைரியமாக இருக்கும் படி ஆறுதல் தெரிவித்து இருந்தார்.

நேரில் சென்று விசாரித்த முதல்வர்

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் வீட்டிற்கு சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டவர், டாக்டர்களின் அறிவரையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த தமிழக அரசுக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்து கொண்டனர். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக யாருக்கு ஆதரவு.? தொண்டர்களுக்கு உத்தரவிட்ட டிடிவி தினகரன்

 

click me!