பிரிய மனமின்றி, கனத்த இதயத்துடன் கொல்கத்தா புறப்பட்ட தலைமை நீதிபதி.. பிரிவு உபச்சார விழாவையும் புறக்கணித்தார்.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 1:17 PM IST
Highlights

ஆனாலும் அவரை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தின் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜிய்திற்கு கடிதம் அனுப்பினர், அதேபோல இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களில் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சஞ்சீவ் பானர்ஜியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதம் எழுதி இருந்தனர். 

மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இன்று காலை காரில் சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவையும் அவர் புறக்கணித்து அவர் பயணம் மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வழக்கறிஞர்கள் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் குடியரசுத் தலைவரின் கொலிஜியம் பரிந்துரைக்க ஒப்புதல் அளித்திருந்த நிலையில் அவர் இன்று கொல்காத்தா புறப்பட்டார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி ஷாஹி ஓய்வு பெற்ற நிலையில் கொல்கத்தா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெருமைமிகு சென்னை உயிர் நீதி மன்றத்தின் 50 வது தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் பானர்ஜி கொல்கத்தா பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்,

டெல்லி, பாட்னா, அலகாபாத், கவுகாத்தி, ஜார்கண்ட், ஒடிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார். சிவில் சட்ட விவகாரங்கள் சிறப்பாக வழக்காடக் கூடியவர். இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து சஞ்சீவ் பானர்ஜி மேகலாவுக்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார். ஆனால் சஞ்சீவ் பானர்ஜியின் இடமாறுதலை மறுபடி சரி செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள்கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியும் பலனில்லை.

  

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி  முனீஸ்வரன் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி  வந்தனர், சார்ட்டர்ட் ஹை கோர்ட் என்ற பெருமை கொண்ட பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 பேர் ஆகும், இப்படிப்பட்ட உயர்ந்த பெருமை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வெறும் 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்சீவ் பானர்ஜி மாற்ற பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தனர். ஆனால் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 

ஆனாலும் அவரை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தின் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜிய்திற்கு கடிதம் அனுப்பினர், அதேபோல இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களில் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சஞ்சீவ் பானர்ஜியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதம் எழுதி இருந்தனர். மேலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதேபோல் சஞ்சீவ் பானர்ஜியின் இடம் மாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் விசாரித்த வழக்குகளில் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது, இதை எதிர்த்து பாஜக மாநில நிர்வாகி கரு. நாகராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும், கொரோனா காலத்தில் தமிழ்நாட்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இது போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்து பல உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இடமாற்றத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை புறக்கணித்த  அவர் தனது காரில் இன்று காலை கொல்கத்தாமாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். 
 

click me!