சென்னை பெருநகராட்சியை எஸ்.பி.வேலுமணிக்கு மொட்டை அடித்துக் கொடுத்த தலைமை பொறியாளர்... யார் இந்த நந்தகுமார்..?

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2021, 12:43 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி மொட்டை அடித்ததில் முக்கிய பங்கு இந்த நந்தகுமாரையே சாரும் என்கிறார்கள். 

அதிகாரத்தை மீறி பதவி உயர்வு பெற்று பல நூறு கோடிகளை ஊழல் மூலம் சேர்த்த சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெண்டர் முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியதாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் அடையாறு காந்தி நகர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி மொட்டை அடித்ததில் முக்கிய பங்கு இந்த நந்தகுமாரையே சாரும் என்கிறார்கள். 

நந்தகுமார் எப்படி பதவிக்கு வந்தார்? எவ்வளவு சம்பாதித்தார் என்பது பற்றி சென்னை பெருநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ‘’சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் தந்தையும், புகழேந்தியும் திருவொற்றியூர் மெட்டல் பாக்ஸ் கம்பெனியில் ஒன்றாக பணியாற்றினார்கள். மெட்டல் பாக்ஸ் கம்பெனியிலிருந்து, புகழேந்தி சென்னை மாநகராட்சிக்கு பணிக்கு வந்தார். தன்னுடன் பணியாற்றியவரின் மகன் என்பதால் மாற்றத்திறனாளி என்ற சலுகையில் நந்தகுமாரை சென்னை மாநகராட்சியில் பணிக்கு சேர்த்துவிட்டார் புகழேந்தி.

1993 ஆம் ஆண்டில் நந்தகுமார், தெற்கு சென்னை டிப்போவில் லாரி பழுது பார்க்கும்  உதவி பொறியாளராக தலைமை பொறியாளராக இருந்த புகழேந்தியின் கீழ் பணியில் சேர்கிறார். லாரிகளை மட்டுமே கவனிப்பதற்காக அவர் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டார். அப்போதைய சூழலில் நந்தகுமாரால் பொதுவான பொறியாளர் பதவிக்குள் நுழைய முடியாது. அதன் பிறகு அமைச்சர் செல்வகணபதி மூலம் சிவில் பொறியாளராக முயற்சித்தும் தோல்வி அடைகிறார். அவருக்கு மேலே 20 சிவில் இன்ஜினியர்கள் சீனியர்களாக இருந்தனர். ஆகையால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகையால் 1993முதல் 2001 வரை நந்த குமாஅர் லாரி டிபார்ட்மெண்டில் பணியாற்றி வந்தார்.   
 
2001ல்அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது கராத்தே தியாகராஜன் மற்றும் வெற்றிவேலும் உதவ, லாரி டிபார்ட்மெண்டில் இருந்து நகர திட்டமிடல் துறைக்கு மாறினார். அவரது மைத்துனர்  பொன்குமார் மூலம் அனைத்து சிவில் இன்ஜினியர்களின் பதவி உயர்வையும் உடைத்து, சீனியாரிட்டியில் டாப் ஸ்டில் தனது பெயரை கொண்டு வந்தார் நத்தகுமார். 20 சிவில் பொறியியலாளர்களும் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். இப்போது அந்த சிவில் பொறியியலாளர்கள் தலைமை பொறியாளர்களாக இருக்க வேண்டும்.

பின்னர் அவரது மைத்துனரும், கட்டிட, விவசாய சங்க தலைவருமான பொன்குமார் திமுகவில் சேர்ந்தார். பொன்குமார் அவரை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் அப்போது அழைத்துச் சென்று, அவரை வேளச்சேரி உதவி நிர்வாக பொறியாளராக பதவி பெற்றார். மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை நந்தகுமார் தனது அலுவலகத்தில் மாற்றி திமுகவினரையும் மிரட்டி 2007 முதல் 2012 வரை பல கோடிகளை சம்பாதித்தார். பின்னர் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்கு வந்தது. அவர்  மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவரது பதவி உயர்வும் நிறுத்தப்பட்டது.

பின்னர் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா மூலம் குற்றப்பத்திரிக்கையை நீக்கி விட்டு மண்டலம் 12- 14 ஆகியவைகளில் மாநகராட்சி பணிகளை மேற்பார்வையிடும் முழு பொறுப்பும் தரப்பட்டது. அங்கு அவர் நடத்தாத ஊழலே இல்லை. அத்தனை அட்ராஸிட்டிகளையும் செய்தார். அடுத்து நந்தகுமாரின் 3வது இன்னிங்ஸ் தொடங்கியது. இதற்காகத்தான் காத்திருந்தாரோ என்னவோ சென்னை மாநகராட்சி பஸ்ரூட் ரோடு டிபார்ட்மெண்டில் இயந்திர பொறியாளராக அல்லாத நந்தகுமாருக்கு பதவி கொடுக்கப்பட்டது. அந்தப்பதவி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தரகு வேலை செய்வதற்காகவே கொடுக்கப்பட்டது.  நேர்மையான சிவில் இன்ஜினியர்கள் அந்தப்பதவியில் இருக்க முடியாது. அதன் பிறகு 2014 ல் அவர் அதே டிபார்ட்மெண்டின் தலைமை பொறியாளராக மாற்றப்பட்டார். 

தலைமை பொறியாளராக பதவிக்கு வரவேண்டும் என்றால் கட்டாயம் ஆறு ஆண்டுகள் நிர்வாக பொறியாளராக இருந்திருக்க வேண்டும். ஆனால், தகுதியான அனைத்து சிவில் இன்ஜினியர்களையும் தவிர்த்து விட்டு தலைமை பொறியாளராக பதவி உயர்த்தப்பட்டார். அதற்கு காரணம் பணம் வசூலித்துக் கொடுக்கும் நபராக எஸ்.பி.வேலுமணி, நந்தகுமாரை பார்த்தது தான். 

நந்தகுமாருக்கு ஒருபோதும் தலைமை பொறியலாளராக வாய்ப்பு இல்லை. அவர்  எஸ்.பி.வேலமணிக்கு ரூபாய் 2500 கோடி கமிஷனாக பெற்றுக் கொடுத்துள்ளார். நந்தகுமாரை தலைமை பொறியாளராக மாற்றியதால் பல்வேறு வங்கிகளிடமிருந்து கடனாக 25000 கோடி பெற்றுக் கொடுத்து அதிலும் கமிஷன் அடித்துள்ளனர். தலைமை பொறியாளர் என்கிற பதவிக்கு புதிய கோப்பை செயலாளர், தலைமை செயலாளர் மூலம் உருவாக்கி இருக்கிறார் எஸ்.பி. வேலுமணி.  நிர்வாகத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறி, நந்தகுமாரை தலைமை பொறியாளராக உயர்த்தினார். மண்டலங்களில் சிவில் கண்காணிப்பு பொறியாளர்கள் அமைதியாக இருந்து தலைமை பொறியாளர்களாக மாறுவதற்கான நியாயமான உரிமைகளை எஸ்.பி வேலுமணியின் சர்வாதிகாரத்திற்கு பயந்து இழந்துள்ளார்கள்.

அனைத்து சிவில் பொறியியலாளர்களும் குரலற்று போய்விட்டார்கள். கமிஷன், ஊழலில் ஈடுபட்ட பொறியாளர் தலைமை பொறியாளர் நந்தகுமாரையும் எஸ்.பி.வேலுமணியையும் விசாரணை நடத்தி அவர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என கோரிக்கை வைத்து வந்தார்கள். இப்போது நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

click me!