பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி.. அம்பலப்படுத்தியவர் மீது ஜாமீன் வரமுடியாத வழக்கு.. கொதிக்கும் எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 7:08 AM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது ஜாமினில் வர இயலாத வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்வுகளுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததை அம்பலப்படுத்தியவர் மீது புனையப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என   எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையில் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வரஇயலாத வழக்கினை, திருத்தணி காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர். 

இதை அறிந்த அவரது மகன் திரு.பாபு என்கிற குப்புசாமி (வயது 36)  11.01.2022 பிற்பகல் 4.30 மணியளவில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போன்ற நிகழ்வுகளில் யாரும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். திரு பாபு என்கிற குப்புசாமி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு , இவருக்கு உரிய உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளித்து இவரை காப்பாற்ற வேண்டிய கடமை இந்த திமுக அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். 

திருத்தணியை சேர்ந்த திரு.நந்தன் மீது புனையப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்வதோடு,பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது ஜாமினில் வர இயலாத வழக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இந்நிகழ்வுகளுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.(5/5)

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

மேலும் உண்மையை தெரிவித்த திருத்தணியை சேர்ந்த திரு.நந்தன் மீது புனையப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்வதோடு,பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது ஜாமினில் வர இயலாத வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்வுகளுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!