
ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகளை பரப்புவதால் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் எனவும் அதனால் அதிகாலை 4 மணிவரை தூங்கவிடாமல் தொடர்ந்து தொலைபேசியில் தன்னை அசிங்கமாக திட்டுகிறார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி, திட்டங்களை விமர்சித்த தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் திரைப்படத்தின் காட்சிகளை நீக்கமுடியாது மியூட்டும் செய்ய முடியாது என தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜகவின் எதிர்ப்புக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை, ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகளை பரப்புவதால் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் எனவும் அதனால் எனக்கு அதிகாலை 4 மணிவரை தூங்கவிடாமல் தொடர்ந்து தொலைபேசியில் தன்னை அசிங்கமாக திட்டுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
எதையும் தான் சமாளிப்பேன் எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது அநாகரீகமானது எனவும் தெரிவித்தார்.
யாரையும் பாஜக இழுக்க முயற்ச்சிக்கவில்லை எனவும் 620 மருந்துகளின் விலை இந்தியாவில் குறைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
குறைந்திருப்பதை அதிகரித்திருப்பதாக ஏன் காண்பிக்க வேண்டும் எனவும் தவறான புரிந்துணர்வு இருப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
கருத்து சொல்ல உரிமை உள்ளது போல் கருத்தை எதிர்க்கவும் உரிமை உள்ளது என தமிழிசை குறிப்பிட்டார்.