அதிமுகவை காலி செய்து எதிர்கட்சியாக வேண்டும் என்பதுதான் பாஜக திட்டம்.. பகீர் கிளப்பிய திருமாவளவன்.

Published : May 12, 2022, 12:22 PM ISTUpdated : May 12, 2022, 12:23 PM IST
அதிமுகவை காலி செய்து எதிர்கட்சியாக வேண்டும் என்பதுதான் பாஜக திட்டம்.. பகீர் கிளப்பிய திருமாவளவன்.

சுருக்கம்

அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவுக்கு எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் அதற்காக இந்துக்களை சமூக ரீதியாக  பிரிப்பது தான் அவர்களிட் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.  

அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவுக்கு எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் அதற்காக இந்துக்களை சமூக ரீதியாக  பிரிப்பது தான் அவர்களிட் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில்  மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. அதற்காக முதல்வர் நிவாரண உதவிக்காக நிதி மற்றும் பொருளாதார உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பலரும்  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆக மொத்தம் 10 லட்சத்துக்கான காசோலையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளார். அதற்காக முதலமைச்சரின் வெகுவாக பாராட்டுகிறோம். இந்நிலையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றனர், அந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியமாக 10 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம். அத்துடன் முதல்வருக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம், வடகிழக்கு மாகாணத்தை ஒரே கவுன்சிலராக ஆதரித்து ஈழ மக்களுக்காக வழங்கிட வேண்டும் எனவும், இலங்கை அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இலங்கைக்கு அனுப்பக்கூடாது இந்த உதவி தமிழர்களுக்கு போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஒருவர், செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஒருவர் என குழு அமைத்து இந்த நிதி முறையாக அனைவருக்கும் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக நாளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டத்தை நீட் விவகாரத்தில் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார். பாஜகவின் திட்டங்கள் திமுக செயல்படுத்தி வருகிறது என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே என செய்தார்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக திட்டம் வேறு இந்திய அரசின் திட்டம் வேறு என்றார். பாஜகவின் திட்டம் என்பது இந்துக்களை சமூக ரீதியாக பிரிப்பது தான் என்றும் அவர் விமர்சித்தார். மொத்தத்தில் அதிமுக என்ற கட்சியை பின்னுக்குத்தள்ளி திமுகவுக்கு எதிர்க்கட்சியாக வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் என அவர் விமர்சித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!