பாஜக-அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்து திமுக தலைமையில் ஆட்சி.. மத்திய அரசை அலறவிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் .

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 10:51 AM IST
Highlights

திமுகவினர் கொரோனாவில் இருந்து மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நெருக்கடி காலத்தில் கூட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் கொள்கையே மத்திய அரசிடம் இல்லை.  

மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றி பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை திரும்பிக்கூட பார்க்க மோடி அரசு மறுத்து வருகிறது. மத வெறி அரசாகவே பா.ஜ.க செயல்படுகிறது. பெண்கள் உரிமையை பாதுகாக்க வழியில்லை, பாலியல் கொடுமை, பெண்களுக்கான பாதுகாப்பு என அனைவரின் உரிமைக்காக போராட உறுதியேற்போம். நாளை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ளது.பா.ஜ.க அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்து திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட உள்ளது. 

திமுகவினர் கொரோனாவில் இருந்து மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நெருக்கடி காலத்தில் கூட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் கொள்கையே மத்திய அரசிடம் இல்லை. கொரோனாவை கையாண்டதில் மோடி அரசாங்கம் படுதோல்வி அடைந்துள்ளது.  தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யாமல், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது மோடி அரசு. மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் கொரோனா 2ம் அலையில் இருந்துபாதுகாத்திருக்க முடியும்.  

தமிழக மக்கள் ஒன்றுபட்டு கொரோனாவை எதிர்த்து போராட உறுதியேற்க வேண்டும்.படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடே முடிந்தால் சொல்லுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற கோஷத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நோய் தொற்று இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

click me!