தமிழக அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றம்.. பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி.. அட்ராசிட்டி செய்யும் L.முருகன்

By vinoth kumarFirst Published Aug 16, 2020, 4:43 PM IST
Highlights

இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜக தனித்துக் களம் கண்டது. அன்றைக்கு பாஜகவின் தமிழகத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதை அவ்வளவு எளிதாகத் தமிழக மக்கள் மறந்துவிட முடியாது. ``பழம் பழுக்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, சூரியன் உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அவர் பேசிய வசனங்கள் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானது. அவர் தமிழகத் தலைவர் பதவியிலிருந்து விடைபெறும் வரை தாமரை மலரும் என்கிற அவருடைய கருத்தில் பின்வாங்கவே இல்லை. இப்போது தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் எல்.முருகனும் தமிழிசைக்கு இணையாக உத்வேகமாகக் கருத்துகளைப் தொடர்ந்து கூறி கொண்டு வருகிறார். 

இந்நிலையில், சென்னையில் பாஜக தலைமையிடமான கமலாலயாவில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்.

பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பார்கள் என்று பேசியுள்ளார்.

click me!