தொகுதிக்கு ரெண்டு பேரு... ஆர்.கே.நகர் ஃ பார்முலா... தீயாய் வேலை பார்க்கணும்... 234லும் இறங்கி அடிக்கணும்! தினா பக்கா ஸ்கெட்ச்

 
Published : Feb 28, 2018, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
தொகுதிக்கு ரெண்டு பேரு... ஆர்.கே.நகர் ஃ பார்முலா... தீயாய் வேலை பார்க்கணும்... 234லும் இறங்கி அடிக்கணும்! தினா பக்கா ஸ்கெட்ச்

சுருக்கம்

The awesome name for the module is to see RK Nagar and Formula fire work

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அதிமுக கோஷ்டிகளும் ஈடுகொடுத்து அடுத்தடுத்த ஆக்ஷனில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் தினகரன்.

ஆர்கே நகரின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் தினகரனின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தினகரன் தமிழகம் முழுவதும் தொகுதிகளிலும் சுற்றுப் பயணத்தை தொடக்கி முடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த தினகரன், தற்போது அடுத்தகட்ட பணிகளில் செம பிஸியாகிவிட்டார். இதற்க்கு முன்பு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இனி என்ன நடக்கக்கூடும்?

என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருகின்றனர் தினாவின் ஆதரவுக் கைகள் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.

அந்தத் தீர்ப்பு அரசுக்கு எதிராகத் தான் இருக்கும். அதற்கு அடுத்த நிமிடமே எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்பது உறுதியாக இருக்கிறார் தினகரன். இந்த ஆண்டு இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என முழுமையாக நம்புகிறார்.

இதனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். ‘எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தேர்தல் வந்தால் அதைச் சமாளிக்க நாம தயாராக இருக்கணும். ஆர்.கே.நகரில் நாம எப்போ தேர்தல் வரும்னு எதிர்பார்த்தோமா? எந்த நேரத்தில் வந்தாலும் சமாளிக்கணும்னு இறங்கி வேலை பார்த்துட்டு இருந்தோம் இல்லையா...

அதேபோல 234 தொகுதிக்குமே நாம தீயாக வேலைகளை தொடங்கிடணும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இப்போ இருந்தே செய்யணும்’ என ஆதரவாலக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் தினகரன்.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்னால் சில வேலைகளை செய்து முடித்திருக்கிறார். யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? குறைந்தது ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்யலாம். மேலும் அதிமுக அதிகம் வாக்குவான்கிய தொகுதிகள் மற்றும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய தொகுதிகள் என தனித் தனியாக பிரித்து,

எந்த அளவிற்கு செலவு செய்யணுமேன ஒரு லிஸ்ட்டே போட்டு வைத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேர் என்ற ரீதியில் பட்டியல் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பட்டியலில் இடம் பெற வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளிடம் போட்டியும் தொடங்கிவிட்டது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!