கருத்துரிமையை பறிக்கவே கைது நடவடிக்கை :  இயக்குநர் அமீர் குற்றச்சாட்டு

First Published Jun 25, 2018, 6:10 PM IST
Highlights
The arrest of the copyright owner Director Amir charge


கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ம் தேதி விவாத்தின் போது அமைதியை குலைக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக கோவையில் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.  அமீர் சர்ச்சைக்குரிய வகையிலும், மோதல்  ஏற்படுத்தும்  வகையிலும் பேசியதாகவும்  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்திருந்தனர்.

 இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமீருக்கு  சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி இயக்குனருக்கு பீளமேடு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். 

காவல்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று இயக்குனர் அமீர் இன்று பீளமேடு காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தொலைக்காட்சியில் கலந்து கொண்டதன் நோக்கம் , என் தரப்பில் பேசப்பட்டது மற்றும் எதிர் தரப்பில் பேசியது குறித்து காவல் துறையிடம் விளக்கம் அளித்தேன் என்று கூறினார். 

நிகழ்ச்சியின்போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். கோவை நீதிமன்றத்தில் நீதிபதி கூட அமீர் என்ன தவறாக பேசி இருக்கின்றார் என்று இன்று கேள்வி எழுப்பி இருக்கின்றார் என்றும் தெரிவித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என அமீர் பேட்டியளித்துள்ளார். 

சமீபத்திய அனைத்து கைதும், கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை. இவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கிறேன் எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

click me!