ரொம்ப வேதனையா இருக்கு.. தோல்விக்கு விடை தற்கொலை அல்ல.. மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்.!

By vinoth kumarFirst Published Jun 22, 2022, 10:56 AM IST
Highlights

10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை என்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. 

அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், வேலூர் மாவட்டம் கடைசி இடமும் பெற்றது. அதன்படி, தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில், இவர்களில் கிட்டதட்ட 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் என்பது 93.76 சதவீதமாகும். அத்துடன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதியிருந்த நிலையில்  8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 90.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை என்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தோல்விக்கு விடை தற்கொலை ஆகாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, அந்த தனித்தன்மையை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை என்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

தோல்விக்கு விடை தற்கொலை ஆகாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, அந்த தனித்தன்மையை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

1/2 pic.twitter.com/pigLNij9Yb

— K.Annamalai (@annamalai_k)

அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளிவிட்டு நீங்கள் முன்னேறவேண்டும். முயற்சி திருவினையாக்கும்! என்று கூறியுள்ளார். 

click me!