EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்

EPS Vs OPS :நாளை பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில்,  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்சிடம் கட்சியின் வரவு செலவு அறிக்கை ஓபிஎஸ்சிடம் ஒப்படைப்பு.


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.  அதிமுகவுக்குள் ஒற்றை  தலைமை என்ற கோரிக்கை வலுத்துள்ளது . இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கான  ஆதரவு கட்சியில் குறைந்துள்ளது. இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்து விட்டது.

Latest Videos

இதனால் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.  பன்னீர்செல்வம் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் ஆவடி காவல் ஆணையருக்கு ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். தனியார் இடத்தில் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்அரங்கத்தில் நடைபெறுவதால் தடைவிதிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் படி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக 23 தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீர்மானக்குழு ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒப்புதலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு, செயற்குழு கூடுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்ஸிடம் அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

click me!