
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மைதான் எனவும், ஜெயலலிதாவை கொலை செய்த குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், பி.எச். பாண்டியன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இதற்கு பொய் பேச வேண்டாம் என அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருப்பது மனிதாபிமானத்திற்கு விரோதமானது.
அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதாவின் மரணத்தை பி.எச்.பாண்டியனும் மனோஜ் பாண்டியனும் விமர்சிக்கின்றனர்.
ஜெயலலிதாவை யாரும் தள்ளிவிடவில்லை. வீணாக பொய் பேச வேண்டாம்.
உண்மைக்கு புறம்பாக பேசுவது ஜெயலலிதாவின் புகழுக்கு இழுக்காக்கிவிடும்.
ஜெயலலிதாவின் மனவேதனைக்கு காரணமானவர் பி.எச் பாண்டியன்.
மருத்துவர்கள் விளக்கம் தந்த பிறகும் குதர்க்கமாக பேசி வருகின்றனர்.
பி.எச். பாண்டியனின் அனைத்து கேள்விகளுக்கும் அப்போலோ மருத்துவர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.
திமுக தூண்டுதலால் பி.எச்.பாண்டியனும் மனோஜ் பாண்டியனும் பேசி வருகிறார்கள்.
சிசிடிவியை அகற்றியது மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்டது.
குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என தெரிவிப்பது விசாரணை செய்வது போல் தெரிகிறது.
அந்த விசாரணை முடிவுகளை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கட்டும்.
சுயநலத்திற்காக ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனங்களை பி.எச்.பாண்டியன் அள்ளி வீசக்கூடாது.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.