
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு தொடங்கியது.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ,பல்வேறு கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் RB உதயகுமார் சார்பில், தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு ,போஸ்டர் ஒட்டப்பட்டது.
மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓட்டப்பட்ட போஸ்டரில், தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அனைவரும், அனைத்து பாடப்பிரிவிலும் 100/100 மதிப்பெண்களோடு வெற்றி பெற்று, ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றிட வாழ்த்துகிறோம் என போடப்பட்டு , அதற்கடியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் RB உதயகுமார் பெயர் இடம் பெற்றுள்ளது.
12 ஆம் வகுப்பில் 100/100 மதிப்பெண் எப்படி ? என , தற்போது இந்த போஸ்டரால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் 200/200 மதிப்பெண் என்பதற்கு பதிலாக , 100/100 என போடப்பட்ட இந்த போஸ்டர் குறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.