அதிமுகவை 19 தொகுதிகளில் சரிச்சுவிட்ட அமமுக கூட்டணி... எந்தெந்த தொகுதிகளில் தெரியுமா?

By Asianet TamilFirst Published May 4, 2021, 10:02 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமும - தேமுதிக கூட்டணி அதிமுக கூட்டணி 19 தொகுதிகளில் தோல்வியடைய காரணமாக அமைந்திருக்கின்றன. 
 

‘அதிமுகவை கைப்பற்றுவோம்’ என்று சொல்லிக்கொண்டு தனிக் கட்சி நடத்தி வரும் அமமுக, இந்தத் தேர்தலில் வெறும் 2.45 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதன் கூட்டணி கட்சியான தேமுதிக 0.45 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து முழுமையாக 3 சதவீத வாக்குகளைக்கூட தாண்டவில்லை. அதேவேளையில் 19 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றிக்கும் அதிமுக கூட்டணியின் தோல்விக்கும் இக்கூட்டணி காரணமாக இருந்திருக்கிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியல்:
1.நெய்வேலி: திமுக வேட்பாளர் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 2,230 வாக்குகளைப் பெற்றது.
2. காட்பாடி: திமுக வேட்பாளர் 748 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 1,040 வாக்குகளைப் பெற்றது.
3. விருத்தாச்சலம்: காங்கிரஸ் வேட்பாளர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு தேமுதிக 26,908 வாக்குகளைப் பெற்றது.
4. காரைக்குடி: காங்கிரஸ் வேட்பாளர் 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 44,864 வாக்குகளைப் பெற்றது.
5. நாங்குநேரி: காங்கிரஸ் வேட்பாளர் 15,363 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 30,596 வாக்குகளைப் பெற்றது.
6. ராஜபாளையம்: திமுக வேட்பாளர் 3,789 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 7,623 வாக்குகளைப் பெற்றது.
7 மயிலாடுதுறை: காங்கிரஸ் வேட்பாளர் 2,747 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 7,282 வாக்குகளைப் பெற்றது.
8. திருமயம்: திமுக வேட்பாளர் 919 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 1,426 வாக்குகளைப் பெற்றது.
9. கந்தவர்கோட்டை: சிபிஎம் வேட்பாளர் 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 12,840 வாக்குகளைப் பெற்றது.
10. பாபநாசம்: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 19,778 வாக்குகளைப் பெற்றது.


11. மன்னார்குடி: திமுக வேட்பாளர் 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 40,481 வாக்குகளைப் பெற்றது.
12. ஆண்டிப்பட்டி: திமுக வேட்பாளர் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 11,896 வாக்குகளைப் பெற்றது.
13. உத்திரமேரூர்: திமுக வேட்பாளர் 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 7,211 வாக்குகளைப் பெற்றது.
14. திருவாடானை: காங்கிரஸ் வேட்பாளர் 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 32,074 வாக்குகளைப் பெற்றது.
15. வாசுதேவநல்லூர்: மதிமுக வேட்பாளர் 2,367 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 13,367 வாக்குகளைப் பெற்றது.
16. சாத்தூர்: மதிமுக வேட்பாளர் 11,179 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 32,916 வாக்குகளைப் பெற்றது.
17. சங்கரன்கோவில்: திமுக வேட்பாளர் 5,354 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 22,676 வாக்குகளைப் பெற்றது.
18. திருப்போரூர்: விசிக வேட்பாளர் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 7,662 வாக்குகளைப் பெற்றது.
19. தியாகராயநகர்: திமுக வேட்பாளர் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு அமமுக 782 வாக்குகளைப் பெற்றது.
 

click me!