அந்த ஒற்றை வார்த்தை... அமைச்சர் செந்தில் பாலாஜியை பங்கமாய் கலாய்த்த ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2021, 4:51 PM IST
Highlights

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?

சென்னை உள்பட பல பகுதிகளில் மின்தடை இருந்துவரும் நிலையில் மின் தடைக்கு அணில்கள் தான் காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திமுக ஆட்சி வந்தால் கூடவே மின்தடையும் வந்துவிடும் என பொதுமக்கள் பொதுவான கருத்துக்களை தெரிவித்து வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக மின்சார சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் தான் தற்போது மின்தடை ஏற்பட்டு உள்ளதாக சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்திருந்தார். இதற்கு அதிமுக அரசின்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பேட்டியளித்த செந்தில் பாலாஜி காற்று வீசும் போது மரங்கள் மின் வயர்கள் மீது படுவதாகவும், அப்போது மரத்தில் இருக்கும் அணில்கள் மின்கம்பிகள் மீது ஓடுவதால் ஏற்படும் உராய்வு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில்’’மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறியிருக்கிறார்- விஞ்ஞானம்... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? என கிண்டலடித்துள்ளார். 

click me!