லாட்ஜில் பெண்களுடன் உல்லாசம்.. அரைகுறை ஆடையுடன் அமமுக பிரமுகர் உள்பட 2 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!

Published : Jun 22, 2021, 04:50 PM IST
லாட்ஜில் பெண்களுடன் உல்லாசம்.. அரைகுறை ஆடையுடன் அமமுக பிரமுகர் உள்பட 2 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!

சுருக்கம்

உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பெண்ணுடன் ஜாலியாக இருந்த அமமுக பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பெண்ணுடன் ஜாலியாக இருந்த அமமுக பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் காரத்திக்(38). இவர் உத்திரமேரூர் நகர அமமுக செயலாளராக இருந்து வருகிறார்.  உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை  சேர்ந்தவர் வீரராகவன்(47). இவர்கள் இருவரும் நேற்று உத்திரமேரூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில்  தனித்தனி அறைகளில் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இது தொடர்பாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தினர். கார்த்தி தங்கியிருந்த லாட்ஜில்  சோதனை நடத்தியபோது ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருப்பது தெரிந்தது. இவரது பக்கத்து அறையில் வீரராகவன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்தது தெரிந்தது. இருவரும் போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். பின்னர், அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!