
ஆதரவு அளித்ததற்கு நன்றி மோடி அவர்களே…பதவி விலகிய பன்னீர் செல்வம் உருக்கம்….!
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சசிகலா இன்றோ அல்லது 9 ஆம் தேதியோ சசிகலா முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,
தாம் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்ததற்காக தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார்.
அவரோடு சேர்த்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். தற்சமயம் பதவியை ராஜினாமா செய்திருப்பதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.