
முதலமைச்சர் மக்களால் தேர்வு செய்யப்படவேண்டும் என்று சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு தீபா விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் பதவி விலகினார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்படுவதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
வாட்ஸ் அப் , வலைதளங்களில் எதிர்ப்பு ஓடுகிறது. இது குறித்து அதிமுகவில் சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்தார் , அப்போது சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்வானது குறித்து அவர் கூறியதாவது.
பன்னீர் செல்வம் சிறப்பாக செயல் பட்டார் அவர் பதவி விலகுவது வருந்ததக்க விஷயம். முதலமைச்சர் மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் பிரச்சனைகள் அதிகமாக உள்ள நிலையில் இந்த பதவி ஏற்பு என்பது தேவையற்ற ஒன்று.
ஓரிரு நாளில் மக்கள் மனநிலையை அறிய தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்ய உள்ளேன். அதற்கான தொடக்கம் சென்னையில் நடக்கிறது. இதுவரை அதிமுக தரப்பில் இருந்து என்னை யாரும் சந்திக்கவில்லை.இவ்வாறு தீபா கூறினார்.