தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது !!ரஜினி பாணியில் ராமதாஸ்

 
Published : Feb 05, 2017, 09:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது !!ரஜினி பாணியில் ராமதாஸ்

சுருக்கம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக வரலாற்றில் கருப்பு நாளாக பதிவு செய்யப்படும்.

வழக்குகளில் தண்டிக்கப்படாதவர்கள்தான் ஜனநாயக முறைப்படி தலைவராக முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் ஆதரவு இல்லை என்று ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.*
234 தொகுதிகளிலும் தானே நிற்பதாக கூறி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா. மேலும் சசிகலாவை எந்த தொகுதிகளிலும் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவரை முதல்வராக்குவதே ஜனநாயகத்தை மதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்

.ஹை லைட் ட்டாக இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு