ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் போலியா ?

 
Published : Feb 05, 2017, 09:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் போலியா ?

சுருக்கம்

ஓபிஎஸ் கவர்னருக்கு எழுதிய ராஜினாமா கடிதம் போலியா? என்ற கேள்வியை வலைதளத்தில் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தற்போது இது வைரலாகி வருகிறது.


தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகுகிறேன் - ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்


அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு ஓபிஎஸ் அனுப்பி வைத்துள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் , முதல்வராக ஓபிஎஸ்சும் தேர்வு செய்யப்பட்டனர்.  முதல்வராக சசிகலா வருவார் என்ற கோரிக்கை அதிமுகவைல் வைக்கப்பட்டபோது அதை அதிமுக தொண்டர்கள் , மக்கள் ஏற்றுகொள்ளவில்லை.


இதனால் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவி ஏற்பதை தள்ளிவைத்தனர். ஆனால் நாள் செல்ல செல்ல ஓபிஎஸ் தனிசெல்வாக்கு அதிகரித்து வருவதை பார்த்து முதல்வராக உடனடியாக பதவியேற்க வேண்டும் என்று கார்டன் தரப்பு முடிவெடுத்தது.


இதையடுத்து இன்று நடந்த அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமன்ற தலைவராக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா முதல்வராவது உறுப்பினராவது உறுதியாகி உள்ளது. 


இதனால் முதல்வர் ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கவர்னருக்கு அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில் என்னை 06/12/2016 அன்று முதல்வராக நியமித்தீர்கள் , சொந்தக்காரணங்களுக்காக பதவி விலகுகிறேன். தயவு செய்து என்னுடைய ராஜினாமாவை ஏற்று என்னை விடுவியுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.


கடிதத்தில் கையெழுத்திட்டு அதில் மதியம் 1.40 மணி என்று கையெழுத்திட்டுள்ளார்.  அந்த கடிதத்தில் 5/12/2017 என்று தேதி போட்டிருந்தாலும், கடிதம் ஃபேக்ஸ் அனுப்பப்பட்ட தேதியில் 01/01/2013 மாலை 7.22 என நேரம் காட்டுவதால் இது போலிகடிதமா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் முக நூலில் , வாட்ஸ் அப்புகளில் , ஃபேஸ்புக்கில் எழுப்பி வருகின்றனர். 


இது குறித்து முதல்வர் அலுவலகம் தான் பதிலளிக்க வேண்டும். 
 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு