தினகரனுடன் தங்கதமிழ்செல்வன் திடீர் மோதல் ஏன்..? அமமுகவை அதிர வைத்த காரணம்..!

By vinoth kumarFirst Published Jun 25, 2019, 11:03 AM IST
Highlights

டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான காரணம் அமமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளது.

டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான காரணம் அமமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்த பிறகு தினகரன் மீதான மரியாதை தங்கதமிழ்செல்வனுக்கு மட்டும் அல்ல பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு போய்விட்டது. இதனால் பெரிய அளவில் அமமுகவில் ஈடுபாடு இல்லாமல் தான் கட்சி நிர்வாகிகள் உள்ளனர். 

இதனால் முக்கிய நிர்வாகிகள் சிலரை தினகரனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சின்னம்மா வந்த பிறகு நிலைமை மாறிவிடும் அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள் என்று கூறி வந்துள்ளார். இதற்கிடையே தங்க தமிழ்செல்வனுக்கு அதிமுகவில் இருந்து தூது வந்துள்ளது. இதனால் அவரும் அதிமுகவில் மீண்டும் இணையும் முடிவுடன் பேச ஆரம்பித்துள்ளார். 

அத்துடன் அமமுக நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் அதிமுகவிற்கு அழைத்துச் செல்ல தங்கதமிழ்செல்வன் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே தங்கதமிழ்செல்வனின் சொந்த ஊரான தேனியில் அமமுக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட தினகரன் ஏற்பாடு செய்தார். ஆனால் இந்த கூட்டம் குறித்து தங்கதமிழ்செல்வனிடம் தினகரன் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. 

தான் அதிமுகவில் சேர பேசி வரும் நிலையில் தனது ஊரில் கூட்டம் போட்டு தினகரன் தனதுசெல்வாக்கை காட்டினால் தனது பேரத்தை அது பாதிக்கும் என்று கடுப்பாகியுள்ளார் தங்கதமிழ்செல்வன். இதனால் தான் டிடிவி உதவியாளரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு பிடி பிடித்துள்ளார் தங்கதமிழ்செல்வன். அதனை செல்போனில் ரெக்கார்டு செய்து அந்த உதவியாளர் தினகரனிடம் காட்டியுள்ளார்.

அதனை பார்த்து கண் சிவந்த தினகரன் உடனடியாக அந்த செல்போன் உரையாடலை ஊடகங்களுக்கு லீக் செய்ய கேட்டுள்ளார். இதன் பிறகே அந்த ஆடியோ வைரல் ஆனது. இதனிடையே இப்படி கூட்டம் நடத்துவது தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையிலான பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் தங்கதமிழ்செல்வன் உடனடியாக அதிமுகவில் சேர துடித்ததற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.

 

தென்மாவட்ட தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை தினகரன் தரப்பு தங்கதமிழ்செல்வன் தரப்பிடம் கொடுத்ததாகவும் அதற்கு தற்போது கணக்கு கேட்டது தான் பிரச்சனையின் துவக்கம் என்று சொல்கிறார்கள். இதே போல் பணத்தை யார் யாரிடம் எல்லாம் கொடுத்தாரோ அவர்களிடம் எல்லாம் தினகரன் கணக்கு கேட்க உள்ளதாக கூறப்படுவதால் அமமுக நிர்வாகிகள் பலர் பீதியில் உள்ளனர்.

click me!