ஹெச்.ராஜாவா இருந்தா என்ன? தப்பு தப்புதான்...! சொல்வது தமிழிசை..!

First Published Mar 6, 2018, 10:10 PM IST
Highlights
thamilisai against speech about h.raja


பெரியார் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து பாஜக கருத்து இல்லை எனவும் யாராக இருந்தாலும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில்,பெரியார் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து பாஜக கருத்து இல்லை எனவும் யாராக இருந்தாலும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

click me!