"அண்ணே நீங்க அழகா இருக்கீங்க" -ஸ்டாலினை புகழ்ந்த தமீமுன் அன்சாரி!!

 
Published : Jul 07, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"அண்ணே நீங்க அழகா இருக்கீங்க" -ஸ்டாலினை புகழ்ந்த தமீமுன் அன்சாரி!!

சுருக்கம்

thameemun ansari praising stalin

கண் அறுவை சிகிச்சை முடித்து கருப்பு கண்ணாடியுடன் வந்த ஸ்டாலினை நலம் விசாரித்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி "அண்ணே நீங்க அழகா இருக்கீங்க" என்று பாராட்டினார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண் புரை அறுவை சிகிச்சைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் நேற்று சட்டசபை கூட தொடரில் பங்கேற்றார். கண் அறுவை சிகிச்சை நடந்ததால் பாதுகாப்புக்காக கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார்.கருப்பு கண்ணாடியில் ஸ்டாலின்  வித்தியாசமாக தெரிந்தார். சட்டசபை கூட்டத்திலும் கருப்பு கண்ணாடி அணிந்தபடியே பங்கேற்றார்.

கூட்டத்தொடரில் ஸ்டாலினை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி ஸ்டாலினை அவரது அறையில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது கருப்பு கண்ணாடி அணிந்திருந்த ஸ்டாலினை பார்த்து "அண்ணே நீங்க சினிமா ஹீரோ மாதிரி ஜம்முனு அழகா இருக்கீங்க. இந்த கண்ணாடியை அப்படியே தொடர்ந்து போடுங்கள்" என்று சிரித்த படியே கூற ஸ்டாலின் அதை ரசித்து சிரித்தார்.
இதை தனது செய்தி குறிப்பில் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!