நீண்ட இழுபறிக்குப் பின் தகில் ரமானியின் ராஜினாமா ஏற்பு ! குடியரசுத் தலைவர் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 21, 2019, 8:05 AM IST
Highlights

இடமாற்றம் விவகாரம் தொடர்பான பிரச்சனையில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹீல்ரமானியின் ராஜினாமாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். இதையடுத்து அவர் மும்பை திரும்பவுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தஹில் ரமானி மேகாலயா உய்ர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட இந்த இட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி தகில் ரமானி கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த கொலீஜியம் இட மாற்றத்தை உறுதி செய்தது. இதையடுத்து தகிவ் ரமானி  தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவை ஏற்கும்படி குடியரசுத் தலைவருக்கு தகில் ரமானி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார். செப்டம்பர் 6 ஆம் தேதி  தகில் ரமானி ரமானி ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்ததாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது


சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை ஜனாதிபதி ராம்நாத் நியமிக்க ஒப்புதல் அளித்தார். 

தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைந்து காலியிடங்கள் 18 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக வினீத்கோத்தாரி நாளை மறுநாள்பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய்குமார் மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியம் சிபாரிசு செய்திருந்தாலும் ஜனாதிபதி ராம்நாத் அதற்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி தகில் ரமானியின் இடமாற்றத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் பல போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!