வருமானம் ஆமை வேகம்.. பெட்ரோல் டீசல் புலிவேகம்... மத்திய மாநில அரசுகளை பொளந்துகட்டும் தேமுதிக விஜயகாந்த்.!

Published : Jul 01, 2020, 09:30 PM IST
வருமானம் ஆமை வேகம்.. பெட்ரோல் டீசல் புலிவேகம்... மத்திய மாநில அரசுகளை பொளந்துகட்டும்  தேமுதிக விஜயகாந்த்.!

சுருக்கம்

கொரோனா தொற்று உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் கச்சஎண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்கவில்லை.

கொரோனா தொற்று உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் கச்சஎண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் எண்ணெய் நிறுவனங்கள்  பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் வருமானமின்றி வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையிலும் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். இந்த விலையேற்றத்தை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்த விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும்  நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில்...

"கச்சா எண்ணையின் விலை வெகுவாக குறைந்துவரும் நிலையில், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். தனிநபரின் வருமானம் ஆமை வேகத்திலும், பெட்ரோல், டீசல் விலை புலி வேகத்திலும் உயர்ந்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது.இதனால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்றும், அதில் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவர் எனவும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை வேண்டும்.


 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!