தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.! கலக்கத்தில் தொண்டர்கள்...!

By T BalamurukanFirst Published Oct 6, 2020, 11:04 PM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு (06.10.2020) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு (06.10.2020) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தலைவர் விஜயகாந்துக்கு, கடந்த மாத இறுதியில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதனுடன் கூடவே கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கா அவர் அனுமதிக்கப்பட்டார்.


அவரை தொடர்ந்து, தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரும் சில நாட்கள் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.உரிய சிகிச்சைகளுக்கு பிறகு, விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்தும் இரண்டு தினங்களுக்கு முன் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில், விஜயகாந்துக்கு இன்றிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்தான் அவர் கொரோனாவில் இருந்து மீட்டு வீடு திரும்பிய நிலையில். தற்போது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தேமுதிக தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனனர்.இதனிடையே, தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார்" என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

click me!