மதுரை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் மோதல்..! 16சிறுவர்கள் வேறு சிறுவர் பள்ளிக்கு மாற்றம்..!

By T BalamurukanFirst Published Oct 6, 2020, 10:48 PM IST
Highlights

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, வண்டியூர் விலக்கில் சிசிடிவி கேமரா திறப்பு விழாவில் துணை ஆணையர் சிவபிரசாத் தெரிவித்தார்.

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் சிறுவர்கள் மோதலால் பலருக்கு காயம் ஏற்பட்டு வேறு சீர்திருத்தப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

துணை ஆணையர் கூறுகையில், ‘‘மதுரை நகரில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குற்றச் செயல்களைத் தடுக்க முக்கிய இடங் களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

குறிப்பாக சிக்னல், சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்துகி றோம். நகரில் கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல் களில் ஈடுபடுவோரை துரிதமாக பிடிக்க, காவல் ஆய்வாளர்கள், தனிப்படை, டெல்டா படையினருக்கு உத்தரவிட்டுளோம்.பல்வேறு குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடு வதை தடுக்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும். மீண்டும் பாய்ஸ் கிளப் செயல்பாடுக்கு கொண்டு வர முயற்சிக்கப்படும்.மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் 14 சிறுவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்னையில் ஈடுபட்ட16 சிறுவர்களை வேறு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

click me!