கோயில் விழாக்களை வழக்கம்போல நடத்திட அனுமதிக்க வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 1:51 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து இந்து ஆலய விழாக்களை வழக்கம்போல் நடத்திட அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து இந்து ஆலய விழாக்களை வழக்கம்போல் நடத்திட அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் பரவல் வேகமாக காணப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி சித்திரை மாதங்களில் ஏராளமான இந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். 

எனவே ,கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து இந்து ஆலயங்களுக்கான விழாக்கள் வழக்கம்போல் நடத்திட மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். கோயில் விழாக்களை நடத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் அளிக்கும் மக்களுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி விரைந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
 

click me!