உங்க தலைவரை சூதானமா இருக்கச் சொல்லுங்க... மு.க.ஸ்டாலினுக்காக வருத்தப்படும் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2019, 2:15 PM IST
Highlights

திமுகவில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்க அதிமுக தலைமை முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

திமுகவில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்க அதிமுக தலைமை முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்து பிறகு டி.டி.வி.தினகரன் டீமுக்கு போய் அங்கிருந்து திமுகவில் சேர்ந்து அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாகி விட்டார் செந்தில் பாலாஜி. இப்போது திமுகவில் அவரது ஆதிக்கம் அதிகமாகி விட்டதாக திமுக சீனியர்கள் புலம்பி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் கட்சியில் மட்டுமல்லாது ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீடு வரை அதிகரித்து விட்டது தி.மு.க.வின் சீனியர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.  

இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியின் முந்தைய செயல்பாடுகளை எடுத்துக் கூறி, ’உங்கள் தலைவரை செந்தில் பாலாஜியிடம்  எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்’ எனக் கூறி இருக்கிறார்.

அதற்கு அந்த முன்னாள் அமைச்சர், ’’சீனியர்களான நாங்களே எங்கள் தலைவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டுத்தான் சந்திக்க வேண்டி இருக்கிறது. அப்போதும் கூட மனம் விட்டு பேச வாய்ப்பதில்லை’’ என கூறியிருக்கிறார். முதல்வர் மூலமாக செந்தில் பாலாஜி பற்றிய எச்சரிக்கையை மு.க.ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். தி.மு.க. உள்விவகாரத்தைப் பற்றி அ.தி.மு.க. கவலைப்படுவதை இரண்டு அரசியல் கட்சியினரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.  
 

click me!