இளம் பெண்ணுடன் உல்லாசமா இருந்த அரசியல்வாதி... குஜாலா இருந்த நேரத்தில் நுழைந்த போலீஸ்... திருச்சியில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு!!

Published : Jul 29, 2019, 01:12 PM IST
இளம் பெண்ணுடன் உல்லாசமா இருந்த அரசியல்வாதி...  குஜாலா இருந்த நேரத்தில் நுழைந்த போலீஸ்... திருச்சியில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு!!

சுருக்கம்

இளம்பெண்ணுடன் ஓட்டலில் தங்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணுடன் ஓட்டலில் தங்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜங்‌ஷன் ராயல் ரோடு பகுதியில் பிரபல ஓட்டல் விடுதி உள்ளது. இங்கு மேலாளராக தமிழரசன் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு ஒரு வாலிபர் ஒரு பெண்ணுடன் அங்கு வந்தார்.

தங்கள் இருவரையும் கணவன், மனைவி என்று மேலாளரிடம் கூறினார். அவருக்கு மேலாளர் தங்க அறை கொடுத்தார். இந்நிலையில் அந்த வாலிபரின் நடவடிக்கையில் ஓட்டல் மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண் அணிந்திருந்த உடையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கண்டோன் மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அந்த வாலிபர் மற்றும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை உல்லாசத்திற்காக ஓட்டலுக்கு அழைத்து வந்ததும் மேலாளரை ஏமாற்றி அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அந்த ஓட்டலுக்கு சென்ற போலீசார் சென்னை மண்ணயடியை சேர்ந்த நஜீம் என்ற அந்த வாலிபரை கைது செய்தனர். அரசியல் கட்சி பிரமுகரான இவர் மீது பல வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை மீட்ட போலீசார் திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டலுக்கு வரும் சந்தேக நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேனேஜர் கொடுத்த புகாரின் பெண்ணுடன் தங்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!