ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ நோமுலா நரசிம்ஹையா(64) இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ நோமுலா நரசிம்ஹையா(64) இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ நோமுலா நரசிம்ஹையா. கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இவரது மறைவுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.