தெலுங்கானாவில் முழு பள்ளி மாணவியாக மாறிய ஆளுனர் தமிழிசை..!! சென்னை ராயபுரத்தை நினைவு கூர்ந்து சிலாகித்தார்..!!

Published : Nov 07, 2019, 06:10 PM IST
தெலுங்கானாவில் முழு பள்ளி மாணவியாக மாறிய ஆளுனர் தமிழிசை..!! சென்னை ராயபுரத்தை நினைவு கூர்ந்து சிலாகித்தார்..!!

சுருக்கம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மேதகு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நானும் சிறுவயதில்  ராயபுரத்தில் நான் படித்த Saint Annes பள்ளியில் சாரண இயக்கத்தில் நான் இருந்திருக்கிறேன். 

ஐதராபாத்தில் நடந்த சாரண சாரணியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலங்கான மாநில ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் ஸ்கவுட் உடையில் சக பள்ளி மாணவியைப்போல் உலா வந்து, மரக்கன்றுகளை நட்டது அங்கு வந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் உள்ள BHARAT SCOUT & GUIDES சென்டரில் இன்று சாரண சாரணியர் இயக்கத்தின் விழா சிறப்பாக நடைபெற்றது.


 
இதில் மேதகு ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹைதராபாத் சாரண சாரணிய இயக்கத்தின் இயக்குனராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் திரு சந்திரசேகர் அவர்களின் மகளும் ஆகிய திரு கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மேதகு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நானும் சிறுவயதில்  ராயபுரத்தில் நான் படித்த Saint Annes பள்ளியில் சாரண இயக்கத்தில் நான் இருந்திருக்கிறேன். சேவை உள்ளத்தோடு பணியாற்றக்கூடிய  எண்ணமும் நாட்டிற்காக நான் பாடுபட

வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த சாரண இயக்கத்தில் நான் இருந்ததை பெருமையோடு நினைவு கூறுகிறேன்.மேலும் சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் இருக்கும் சாரண சாரணியர் இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகளை நான் கலந்து கொண்டதை பெருமையோடுநினைவு கூறுகிறேன். 

நீங்கள் அனைவரும் ஒரு மிகச்சிறந்த பாரதத்தின் தூண்களாக விலங்கக் கூடியவர்கள் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கவிதா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!