8 கோடி கட்டடத்தை இடிச்சிட்டு உங்க வீட்டு ஜன்னலுக்கு மட்டும் ரூ.73 லட்சம் செலவா..? அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி..!

By Thiraviaraj RMFirst Published Nov 7, 2019, 6:00 PM IST
Highlights

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் குண்டூர் தடேபல்லி கிராமத்துக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே போன்று ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக மட்டும் 73 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கடந்த மாதம் ஆந்திர அரசு அளித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்த மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்யாமல் 73 லட்சம் ரூபாய்க்கு கதவு ஜன்னல் பொருத்துவது எந்த விதத்தில் நியாயம் என, எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் புது வீட்டுக்கான மின்வாரிய செலவு மட்டும் 3.6 கோடியைத் தொட்டுள்ளதாகவும், கூடுதலாகப் புது வீட்டுக்கான ஹெலிபேட் அமைக்க 1.89 கோடி ரூபாய், பக்கத்துக்கு நிலங்களை கைப்பற்றிய தொகை 3.25 கோடி ரூபாய், முதல்வர் மக்களைச் சந்திப்பதற்கான இடம் கட்டமைக்க 82 லட்சம் ரூபாய் என செலவிடப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார்.

அதேபோல முதல்வர் வீட்டுக்கு அருகில், பிரஜா தர்பார் என்னும் பொது மக்கள் சந்திப்பதற்கான இடத்தையும் 82 லட்ச ரூபாயில் கட்டினார். ஆனால், கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது கட்டிய 8 கோடி ரூபாயில் கட்டிய கான்ஃபெரன்ஸ் அறையை ’சட்டவிரோதமாக' கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி இடித்தது ஜெகன் தலைமையிலான அரசு. இப்படி தொடர்ந்து பல்வேறு செலவினங்களை ஜெகன் ரெட்டி, செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

அண்டை மாநிலமான தெலங்கானாவின் முதல்வரான கே.சந்திரசேகர் ராவ், கடந்த 2016 ஆம் ஆண்டு, 38 கோடி ரூபாய் செலவில் முதல்வர் இல்லத்தைக் கட்டினார். சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, இதைப் போல பல செலவுகளைச் செய்துள்ளார். கடந்த மே, 30 ஆம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்றார் 46 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போதிலிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அவர் புகழப்பட்டாலும், சில நடவடிக்கைகளால் அவர் விமர்னங்களுக்கும் உள்ளானார். 

உதாரணத்திற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் இருந்த திட்டம் ஒன்றுக்குத் தனது தந்தையின் பெயரைச் சூட்டப் பார்த்தார் ஜெகன். அதேபோல ஒரு கிராம செயலக கட்டிடத்திற்கு தனது கட்சிக் கொடியின் வண்ணத்தைப் பூசியதற்கும் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

click me!